இன்றைய (05.5.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்: ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு ஆறுதல் அளிக்கும். ஆன்மீக யாத்திரை உங்களுக்கு மிகுந்த திருப்தி அளிக்கும்.

ரிஷபம்: இன்று உங்களிடம் பாதுகாப்பின்மை உணர்வு நிறைந்து காணப்படும். பிரார்த்தனையில் ஈடுபடுவது நன்மை அளிக்கும். உங்கள் மனம் தெளிவாக இருக்கும். அதன் மூலம் வெற்றி கிடைக்கும்.

மிதுனம்: மனதில் காணப்படும் வருத்தம் காரணமாக குழப்பங்கள் இருக்கும். பிரார்த்தனை உங்களுக்கு நன்மை அளிக்கும். கருத்து வேறுபாடு ஏற்படும்.உங்கள் தினசரி தேவைகளை உங்களால் பூர்த்தி செய்து கொள்ள இயலாது.

கடகம் : இன்று உங்களிடம் நேர்மறை எண்ணம் காணப்படும். எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் மனதை சமநிலைப் படுத்த வேண்டும். உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.

சிம்மம்: நீங்கள் ஆன்மீகத்திற்கு முக்கியத்துவம் அளித்தால் அமைதி கிட்டும். உங்கள் செயல்களில் வெற்றி காண உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்துங்கள்.

கன்னி: உங்களுக்கு அதிக பணிகள் காரணமாக நேரம் அதிகம் செலவாகும். உங்கள் பணிகளை முடிக்க இயலாமல் இருக்கும். இன்று திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.

துலாம்: இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்காது.வழக்கமான பணிகளை ஆற்றுவதிலும் கடினமான நிலை இருக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

விருச்சிகம்: இன்று உங்களுக்கு மிகவும் வெற்றிகரமான நாள். நீங்கள் மகிழ்ச்சியுடனும் உறுதியுடனும் உங்கள் செயல்களை மேற்கொள்வீர்கள். முக்கிய முடிவுகள் இன்று நன்மை அளிக்கும்.

தனுசு: இன்று கட்டுப்பாட்டை மீறும் சூழல் காணப்படும். என்றாலும் நீங்கள் அதிலிருந்து நன்மை பெற முயற்சிப்பீர்கள். உறுதியும் திட்டமிடலும் உங்களுக்கு வழி காட்டும்.

மகரம்: இன்று நீங்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் விரும்பும் பலன் கிடைக்காது. வெறுமையை உணர்வீர்கள்.நீங்கள் இன்று தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

கும்பம்: இன்று உங்களுக்கு பதட்டமான நாளாக இருக்கும். இசை கேட்டல் திரைப்படங்கள் பார்த்தல் மூலம் உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும். நீங்கள் பிறரால் தவிர்க்கப் படுவது போல உணர்வீர்கள்.

மீனம்:இந்த நாள் உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும். நீங்கள் உறுதியுடன் செயல்படுவீர்கள். இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.நேர்மையான அணுகுமுறை உதவிகரமாக இருக்கும்.

Published by
பால முருகன்

Recent Posts

ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் 3 முறை பந்து மாற்றனும்…ஜோ ரூட் சொன்ன யோசனை!

ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் 3 முறை பந்து மாற்றனும்…ஜோ ரூட் சொன்ன யோசனை!

லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…

9 hours ago

ஒட்டு கேட்கும் கருவி விவகாரம் : யார் மீது சந்தேகம்?-ராமதாஸ் சொன்ன பதில்!

விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…

10 hours ago

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை முறை – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…

10 hours ago

த.வெ.கவின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பா? விளக்கம் கொடுத்த சென்னை கமிஷனர்!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…

11 hours ago

கேஸ் போட்ட இளையராஜா..”அவுங்க வீட்டுக்கு மருமகளா போகவேண்டியது நான்”..வனிதா குமுறல்!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…

12 hours ago

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என்ன? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…

14 hours ago