இன்றைய (09.06.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம்: இன்றைய நாள் சாதகமான பலன்களை அளிக்காது. முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். அமைதியற்றதாகவும் பாதுகாப்பற்தாகவும் உணர்வீர்கள். பிறரிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை.

ரிஷபம்: ஆன்மீகச் சொற்பொழிவுகளை கேட்பதன் மூலமும் மந்திரங்களை ஜபிப்பதன் மூலமும் அமைதி பெறலாம். மோசமான விளைவுகளை தடுப்பதற்கு பேச்சில் கட்டுப்பாடு தேவை.

மிதுனம்: இன்றைய தினம் உங்களுக்கு ஒரு சவாலான தினமாக இருக்கும். என்றாலும் இன்றைய நிகழ்வுகளிலிருந்து நீங்கள் நிறைய அனுபவங்களை கற்றுக் கொள்வீர்கள். இன்றைய சவால்களை எதிர்கொள்வதை கடினமாக உணர்வீர்கள்.

கடகம் : உங்கள் நீண்ட நாள் விருப்பம் இன்று நிறைவேறும். உங்கள் தனிப்பட்ட திறன் பலனளிக்கும். நீண்டகால திட்டமிடலுக்கு இந்த நாளை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி பெறலாம்.

சிம்மம்: உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள உகந்த நாள். வெற்றிக்கு வழிவகுக்கும் நாள் . உங்கள் கடின உழைப்பு மற்றும் உறுதிப்பாடு வெற்றியைத் தரும். இன்று நாள் முழவதும் நீங்கள் புது மலர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

கன்னி: இன்று சவாலான சூழ்நிலைகளை சந்திக்கவேண்டியிருக்கும். முன்னேற்றத்தில் தடை இருக்கும். நீங்கள் முயற்சிகள் எடுக்க வேண்டியது அவசியம். பெரிய அளவில் யோசித்து இலட்சியத்தை அடைய வேண்டும்

துலாம்: நீங்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பலன்கள் இன்று கிட்டாது. இன்று அவசரமான நடவடிக்கைகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். தன்னம்பிக்கை இழக்க நேரிடலாம்.

விருச்சிகம்: இன்று மிகச் சிறந்த நாள். ஆரம்பத்தில் தடைகள் இருந்தாலும் வெற்றி நிச்சயம் கிடைக்கும். சிறு ஏமாற்றங்களை சந்திக்க நேரும். உண்மையான முயற்சியின் மூலம் நினைத்ததை அடைவீர்கள்.

தனுசு: இன்று மிகச்சிறந்த நாள். முயற்சிகளில் எளிதில் வெற்றி கிடைக்கும். சுய முன்னேற்றத்தின் மூலம் வளர்ச்சி காண்பீர்கள். திருப்தி மற்றும் சாதனைகள் இன்று சாத்தியம்.பல புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெறுவதன் மூலம் திருப்தி அடைவீர்கள்.

மகரம்: இன்று சராசரி பலன்களே கிடைக்கும். பொறுமையும் உறுதியும் கடைபிடித்தால் இன்று நல்ல நாளாக அமையும். வெற்றி கிடைக்கும். மந்தமான நிலையை மாற்றி மகிழ்ச்சியாக இருக்க முயலுங்கள்.

கும்பம்: இன்று உங்கள் இலட்சியங்களை அடைய சில வசதிகளை இழக்க நேரிடும். முக்கியமான முடிவுகளை எடுக்க இன்றைய தினம் ஏற்புடையதல்ல. இன்று உங்கள் மனம் ஊசலாடிக் கொண்டிருக்கும்.

மீனம்: இன்று பிரகாசமான வளம் நிறைந்த நாள். தன்னம்பிக்கை அதிகமாகக் காணப்படும். உங்கள் விருப்பங்கள் மேம்படும். உங்கள் முடிவில் உறுதி காணப்படும். பதவி உயர்வு என்ற பெயரில் உங்களுக்கு வெகுமானம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts