வரலாற்றில் இன்று(24.03.2020)… உயிர்க்கொல்லியான உலக காசநோய் தினம் இன்று…

Published by
Kaliraj

காசநோய் ஒரு தொற்று நோய் ஆகும். இந்த நோய்க்கு ஆரம்ப நிலையில் நல்ல சிகிச்சை அளிக்காவிடில் இது மிக அதிக பாதிப்பினை  ஏற்படுத்தும். இந்த நோய் தாக்கும் பாக்டீரியாவின் பெயர் மைக்கோ பாக்டீரியம் டியூபர்க்ளோஸிஸ் என்பது ஆகும். இந்த பாக்டீரியம்  நுரையீரலிலும், தொண்டையிலும் ஏற்படும் இத்தாக்குதலே அவரது சளி, எச்சில் மூலமாக காற்றில் அடுத்தவரை பாதிக்கச் செய்யும். ஆனால் டிபியின் தாக்குதல் சிறுநீரகம், மூளை, எலும்பு இவற்றிலும் கூட ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த டி.பியை 1882ஆம் ஆண்டு  மார்ச் மாதம்  24 ஆம் நாள்  டாக்டர் ராபர்ட் கோச் என்பவர் காசநோய்க்கான காரணியை (TB bacillus) பெர்லினில் அறிவித்து அறிவியல் உலகை வியப்பில் ஆழ்த்தினார். அந்நாள்களில் இந்நோயானது மேற்கத்தைய நாடான  ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏழு பேருக்கு ஒருவரின் உயிரைக் காவு கொண்டு வந்தது. கொக்கின் இக்கண்டுபிடிப்பு காசநோய் பற்றி முழுமையாக அறிய வழிவகுத்தது. 1982 ஆம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காச நோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு (International Union Against Tuberculosis and Lung Disease – IUATLD) மார்ச் 24 ஆம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது. 1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு (WHO) இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது.

காச நோயின் அறிகுறிகள்:

  • மூன்று வாரத்துக்கு மேல் இருமல்.
  • அதிக எடை குறைவு
  • பசியின்மை
  • அதிக காய்ச்சல்
  • இரவில் வியர்வை
  • மிக அதிக சோர்வு
  • சக்தியின்மை

காசநோயினால் ஏற்படும் பாதிப்புகள்:

  • நீரிழிவு நோய், சிறு நீரக நோய் உடையோருக்கு காச நோய் எளிதில் தாக்கலாம்.
  • எய்ட்ஸ் பாதிப்பு உடையவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவின் காரணமாக அதிகப்படியான பேர் எளிதில் பாதிக்கப்படுவர்.
  • புற்று நோய் சிகிச்சை மேற்கொள்பவர்கள் என சில வகை நோய்களை ஏற்கனவே உடையவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதன் காரணமாக காசநோய் பாதிப்பினை பெறலாம்.
  • இன்று உலகில் 9 மில்லியன் மக்கள் வருடந்தோறும் காசநோயினால் பாதிக்கப்படு கின்றார்கள் என்று சொல்கின்றது.
  • டிபி கிருமி உடலில் இருந்தும் அநேகர் பாதிப்பு வெளிப்பாடு இல்லாமல் இருக்கின்றனர். ஆனால் இந்த பாதிப்பு வெளிப்பாடு எந்நேரத்திலும் நிகழலாம். உலகில் முன்றில் ஒரு பங்கு மக்கள் இப்பாதிப்பிற்கு ஆளாவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
  • மற்றொரு வகை டிபி அரிதானது. இவ்வகையில் கிருமி ரத்தத்தின் வழியாக உடலில் பல்வேறு உறுப்புகளை ஒரே நேரத்தில் பாதிக்கும். இவ்வகை மிகவும் அபாயகரமானது.
  • சுகாதாரத்தினை கூட்டுவதே மிகப்பெரிய தீர்வினைக் கொடுக்கும்.
  • பொது இடங்களில் எச்சில் துப்புவது, மூக்கினை சிந்துவது இவை மிக அநாகரிகமானது மட்டுமல்ல. சுகாதார சீரழிவு என்பதனை இனியாவது மக்கள் உணர வேண்டும்.

இந்த தினம் இந்த நோய் குறித்த விழிப்புணர்வை  அறிவதற்க்காக இந்த தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே இதன் விவரங்களை நாம் மட்டுமே அறிந்து கொண்டதோடு மட்டுமல்லாது பிறருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

Published by
Kaliraj

Recent Posts

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

7 hours ago

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…

8 hours ago

மகளிர் செஸ் உலக‌க் கோப்பை: மகுடம் சூடப்போவது யார்? முதல் போட்டி ட்ரா.., இரண்டாவது போட்டி தொடக்கம்.!

ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…

8 hours ago

திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!

திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…

9 hours ago

“ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும்” – பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…

9 hours ago

ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக விளங்கிய சோழர்கள்” – பிரதமர் மோடி புகழாரம்.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…

9 hours ago