காசநோய் என்பது ஒரு தொற்றுநோய் மட்டுமல்லாமல், அது ஒரு உயிர்க்கொல்லி நோயும் கூட என்பது அனைவருக்குமே தெரிந்தது தான். காசநோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் உடனடியாக உயிர் இழந்து விடுவதில்லை. அறிகுறியே இல்லாமல் தோன்றக்கூடிய காசநோய் நாளடைவில் உடலில் அதிகரித்து, அதிகரித்து உயிரை எடுத்து விடுகிறது. இந்த காசநோய் நுரையீரலில் ஏற்படுவது பொதுவான இருந்தாலும், இது மூளை, கருப்பை, சிறுநீரகம், கல்லீரல், எலும்பு, தொண்டை, குடல் போன்றவற்றிலும் எளிதில் தாக்கக் கூடிய தன்மை கொண்டது.
இந்த காசநோய் மைகோபாக்டீரியம் காசநோய் மற்றும் மைகோபாக்டீரியம் போவிஸ் ஆகியவற்றால் ஏற்படுகிறது. குடல் காசநோய் பெரும்பாலும் பொதுவானது தான். இவை பலருக்கும் ஏற்படுகிறது. ஆனால் சிகிச்சையில் தாமதம் ஏற்படும் பொழுது இவர்களை முழுவதுமாக பாதித்து உயிர் இழப்பை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், இந்த காச நோய் பெரும்பாலும் இளம் மற்றும் நடுத்தர வயது மக்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது. மேலும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் இதய நோயாளிகளுக்கும் இந்த காசநோய் மிக எளிதில் ஏற்பட்டு விடுகிறது. காச நோய் ஏற்பட்டவர்களுக்கு இருமல், அடிவயிற்றில் வலி மற்றும் வாந்தி ஆகியவை இருக்கும் என பொதுவாகக் கூறுவார்கள். இருந்தாலும் காசநோய் இருந்தால் எப்படிப்பட்ட அறிகுறிகள் எல்லாம் இருக்கும் என்பது குறித்து இன்று நாம் சற்று தெளிவாக அறிந்து கொள்வோம் வாருங்கள்.
காச நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு முதலில் உடல் எடை இழப்பு ஏற்படும். அதாவது உணவு செரிமானம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட தொடங்கும். அதன் பின்பு உடல் பலவீனமடைந்து உடல் எடை இழப்பு ஏற்படும்.
காசநோய் உள்ளவர்களுக்கு தொடர்ச்சியான காய்ச்சல் இருக்கும். இருந்தாலும் இந்த காய்ச்சல் அதிக அளவில் இருக்காது. லேசான அறிகுறிகளுடன் சாதாரணமாகவே இருக்கும். பின்பு அதிக அளவில் இரவு நேரத்தில் வியர்க்கும். இவ்வாறு இருந்தால் நிச்சயம் மருத்துவர்களை அணுகி ஆலோசனை கேட்பது மிகவும் நல்லது.
காச நோய் இருப்பவர்கள் உணவு பழக்கத்தில் நிறைய மாற்றம் ஏற்படும். பசி ஏற்படாது, மேலும் உணவு மீது ஒரு வெறுப்பு ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.
தொடர்ச்சியாக வயிற்று வலி இருந்தால் அது குடல் காச நோயின் அறிகுறி எனவும் கூறப்படுகிறது. சில நேரங்களில் இந்த வழி இல்லாமலும் இருக்கலாம். சில சமயங்களில் அதிக அளவும் ஏற்படலாம் என கூறப்படுகிறது. அதாவது குடல் காசநோய் ஏற்பட்டவர்களுக்கு குடல் பகுதியில் ஏற்படக்கூடிய பாதிப்பு காரணமாக வயிறு பிடிப்புகள் ஏற்படும். இது தொப்புளை சுற்றி ஒரு கூர்மையான வலி போல இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
காச நோயின் மிக முக்கியமான அறிகுறி வயிற்றுப்போக்கு.மேலும், வாந்தி, குமட்டல் உணர்வு இருந்தால் அது காச நோயின் அறிகுறி என கூறப்படுகிறது. மேலும் சில சமயங்களில் உணவு சாப்பிட்ட பின்பதாக உடனடியாக வாந்தி எடுத்து விடுகிறார்கள். இதுவும் காசநோயின் அறிகுறிகள்.
எனவே, இது போன்ற சில முக்கியமான அறிகுறிகள் இருப்பதாக உணர்ந்தால் பயப்பட தேவையில்லை. மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்டு மருந்து எடுத்து கொள்ளுங்கள்.
லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…
திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…
சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள 'சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த 'ரெட்ரோ' திரைப்படம் நேற்று (மே 1)…
சென்னை : ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசை பகுதியை சேர்ந்த ராமசாமி - பாக்கியம் தம்பதி அவர்களின் பண்ணை…
சென்னை : தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல்…
வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…