அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைப் பின்தொடர்வதை ட்விட்டரின் தலைமை நிர்வாகி ஜேக் டோர்சி நிறுத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகக் கட்சியின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் ஆகியோரையும் ஜேக் பின்தொடரவில்லை என்றும் ,அதே போல் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மகள் இவாங்கா டிரம்ப்பின் ட்விட்டர் கணக்குகளையும் பின்தொடரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டரின் பயனரான டிரம்ப், நவம்பர் 17-ஆம் தேதி முதல் 3,68,743 பின்தொடர்பவர்களை இழந்துள்ளார் என்று டிரம்பின் பொது அறிக்கைகள் மற்றும் ட்வீட்களைக் கண்காணிக்கும் வலைத்தளம் தெரிவித்துள்ளது.
அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது 88.5 மில்லியனாக உள்ளது.நவம்பர் 17-ஆம் தேதி முதல் பைடன் சுமார் 2.5 மில்லியன் பின்தொடர்பவர்களைப் பெற்றுள்ளார்.ஆகவே அவரை தற்போது பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை 21.6 மில்லியனாக அதிகரித்துள்ளது.அண்மையில் டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்ட பதிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் இருந்தாக கூறி ட்விட்டர் நிறுவனம் அவரது ட்விட்டுகளை நீக்கியது குறிப்பிடத்தக்கது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…