அடேங்கப்பா..! இரண்டு முலாம்பழங்களின் விலை இத்தனை லட்சங்களா?..!

ஜப்பானில் இரண்டு யூபரி முலாம்பழங்கள் 2.7 மில்லியன் யென்னுக்கு(ரூ. 18,19,712 லட்சத்துக்கு) விற்கப்பட்டுள்ளன.
ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் பருவ காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் ஒரு பாரம்பரிய ஏலத்தில் இரண்டு யூபரி முலாம்பழம்கள் 2.7 மில்லியன் யென்னுக்கு (கிட்டத்தட்ட 25,000 அமெரிக்க டாலர் மற்றும் இந்திய மதிப்பில் ரூ. 18,19,712) விற்கப்பட்டுள்ளன.ஏனெனில்,இந்த ஆரஞ்சு நிறத்தில் உள்ள யூபரி முலாம்பழம்கள் அவற்றின் உயர் தரம் மற்றும் இனிப்பு சுவைக்கு புகழ் பெற்றவை.எனினும்,கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாகவும் இந்த முலாம்பழங்களின் விலைசற்று அதிகமாகியுள்ளது.
இது கடந்த ஆண்டின் விலையை விட 22 மடங்கு அதிகமாகும் என்று ஏல அமைப்பாளர்கள் திங்களன்று தெரிவித்தனர்.அதாவது,கடந்த ஆண்டு ஒரு ஜோடி முலாம்பழம்கள் 120,000 யென்னுக்கு விற்கப்பட்டன.
அதற்கு முந்தைய ஆண்டு, ஒரு ஜோடி முலாம்பழம் ஒரு மொத்த சந்தையின் ஏலத்தில் ஐந்து மில்லியன் யென் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஏல அமைப்பாளர்கள் கூறுகையில்,”இந்த முலாம்பழங்கள் ஹொக்கைடோ பகுதியின் கடுமையான குளிர்காலத்தில் மிகவும் கடினமான சூழ்நிலையில் வளர்க்கப்படுகின்றன, மேலும் அவை இப்பகுதியின் பெருமையாகக் கருதப்படுகின்றன.இந்தப் பழங்களின் அறுவடை மே மாதத்தில் தொடங்கி ஆகஸ்ட் வரை நீடிக்கும்”, என்று தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!
July 7, 2025
அரோகரா.. அரோகரா.. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது மகா கும்பாபிஷேகம்..!
July 7, 2025