தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக டிரம்ப் மூன்று மாகாணங்களை குறிப்பிட்டு கூறிய நிலையில்,அதில் இரண்டு மாகாணங்களில் பைடன் முன்னிலையில் உள்ளார்.
உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.
பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டது. இதில் ஒரு சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை இழுபறியில் இருந்தது.தற்போது அங்கு வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.இதனிடையே நேற்று அதிபர் தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளது என்று டொனால்ட் டிரம்ப் கூறினார்.மேலும் தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதால் உச்சநீதிமன்றத்தை அணுகி வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவேன் என்றும் கூறினார்.
தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடேன் 264 சபை ஓட்டுகளை பெற்றுள்ளார்.பைடன் வெற்றி பெறுவதற்கு இன்னும் 6 இடங்கள் தேவையாக உள்ளது. டொனால்ட் ட்ரம்ப் 214 சபை ஓட்டுகளை பெற்றுள்ளார்.டிரம்ப் வெற்றி பெற 56 வாக்குகள் தேவைப்படுகிறது. ஆனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் பென்சில்வேனியா, மிக்சிகன், விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் மோசடி நடந்துள்ளதாக டிரம்ப் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்நிலையில் மிக்சிகன், விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் பைடன் முன்னிலையில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…