கொரோனோவுக்கு மருந்து கண்டுபிடிப்பது தொடர்பாக அமெரிக்கா தற்போது ஆய்வு செய்து வரும் நிலையில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அளித்துள்ள முக்கிய தகவலை, வெளியிடப் போவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதையடுத்து வாஷிங்டன் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், அமெரிக்காவில் 50 மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக தெரிவித்தார். மேலும் கொரோனா வைரஸ் கண்ணுக்கு தெரியாத எதிரி என்றும், அதனை அழித்தே தீருவோம் என அவர் குறிப்பிட்டார்.
கொரோனாவை அழிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் சோதனை ஆரம்பித்துள்ளோம் என்றும் மருந்து தயாரிப்பு மற்றும் மருத்துவ தொழில் நிறுவனங்களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும், ஏப்ரல் இறுதிக்குள் கொரோனா வைரசுக்கான மருந்து தயாராகி விடும் என்று அவர் தெரிவித்தார். கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்களுக்கு 15 அறிவுரைகள் கூறி இருப்பதாகவும், பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை இந்த வைரஸ் ஏற்படுத்தி இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார். மேலும் நியூயார்க் துறைமுகத்தில் ராணுவ மருத்துவமனை கப்பல் நிறுத்தப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டார்.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…