மத்திய அமெரிக்காவிலுள்ள, ஹேண்டுராஸ் நாட்டில் முன்னாள் குடியரசுத் தலைவர் போர்ஃபிரீ – ஓ – லோபோ அவர்களின் மனைவி பொனிலா, நாட்டு மக்களின் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறி அவருக்கு 58 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
போர்ஃபிரீ – ஓ – லோபோ ஹேண்டுராஸ் நாட்டின் குடியரசு தலைவராக இருந்துள்ளார். நான்காண்டு ஆட்சி காலத்தில் அவர், அந்நாட்டிற்கு வந்த சர்வதேச நன்கொடை மற்றும் மக்கள் வரிப்பணத்திலிருந்து 7,79,000 டாலர் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு நீதிமன்றத்தில் குற்றவாளி என தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், ‘ ஊழல் செய்த பணத்தை அதிபரின் மனைவி நகைகள் வாங்கவும், மருத்துவ செலவுக்கும் தங்கள் குழந்தைகளின் படிப்புச் செலவுக்காகவும் முறைகேடாக பயன்படுத்தியுள்ளனர் என குற்றம்சாட்டினார். அதனை தொடர்ந்து போனிலாவிற்கு 58 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.
பொனிலாவிற்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர், பொனிலா நிரபராதி என கூறினார். மேலும் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வோம் எனவும் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் பொனிலாவின் உதவியாளருக்கும் ஊழளில் பங்குண்டு என கூறி, அவருக்கு 48 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனைகள் அறிவிக்கப்பட்டபோது நீதிமன்றத்தில் பொனிலாவும் அவரது கணவரும் நீதிமன்றத்தில் இல்லை என தகவல் வெளியானது.
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…