நேற்று நியூயார்க்கில் ஜோ பைடன் ஆதரவாளர்கள் பேரணி நடத்தினர்னார்கள்.
உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.
இந்த வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டது. இதில் ஒரு சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை இழுபறியில் இருந்தது. அதன்படி, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்ஸில்வேனியா, விஸ்காஸின் மாகாணங்களில் தொடர்ந்து இழுபறி நிலவியது.இதனால் அனைத்து மாகாணங்களிலும் தபால் வாக்குகள் எண்ணப்படாமல் இருப்பதால் தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் என தகவல் வெளியாகியது.
இதனிடையே நேற்று அதிபர் தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளது என்று டொனால்ட் டிரம்ப் கூறினார்.மேலும் தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதால் உச்சநீதிமன்றத்தை அணுகி வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவேன் என்றும் கூறினார். ஆனால் டொனால்ட் டிரம்ப் உச்சநீதிமன்றம் சென்றால் வழக்கை சந்திக்க ஜோ பைடன் தரப்பு தயார் என்று தெரிவித்தது. தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடேன் 264 சபை ஓட்டுகளை பெற்றுள்ளார்.பைடன் வெற்றி பெறுவதற்கு இன்னும் 6 இடங்கள் தேவையாக உள்ளது. டொனால்ட் ட்ரம்ப் 214 சபை ஓட்டுகளை பெற்றுள்ளார்.டிரம்ப் வெற்றி பெற 56 வாக்குகள் தேவைப்படுகிறது.ஆனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக டிரம்ப் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு தடை ஏற்பட்டுள்ள நிலையில் ,ஒவ்வொரு வாக்கையும் நிச்சயம் எண்ண வேண்டும் என்று நியூயார்க்கில் ஜோ பைடன் ஆதரவாளர்கள் பேரணி நடத்தினர்னார்கள்.இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…