கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதையடுத்து இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து ஒரு கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசி இப்போது மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த தடுப்பூசிக்காக அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் ஆஸ்திரேலியா ரூ.135 கோடி மதிப்பில் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. இது குறித்து அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரீசன் நேற்று முன்தினம் பேசும்போது, இந்த தடுப்பூசி மனிதர்கள் மீது நடத்தி வரும் சோதனை வெற்றிகரமாக முடிந்தால் நாம் அதை உற்பத்தி செய்வோம்.
மேலும், ஆஸ்திரேலிய மக்களுக்கு இந்த தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என கூறினார். பின்னர், சிறிது நேரத்தில் சிட்னி ரேடியோவுக்கு அளித்த பேட்டியில் ,கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அனைவருக்கும் கட்டாயம் இல்லை என அறிவித்தார். இந்த தடுப்பூசி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என கூறினார்.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…