எதற்கும் துணிந்தவன் படத்தில் வடசென்னை பட நடிகர்.?

Published by
பால முருகன்

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் சரண் சக்தி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்துள்ள திரைப்படம் “எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். படத்தில், ராதிகா, சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

நேற்று “எதற்கும் துணிந்தவன்” திரைப்படத்தின் 51 நாட்கள் கொண்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. வெயில், மழை பாராமல் பணியாற்றிய படக்குழுவினருக்கு தனது நன்றியை இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்திருந்தார். படத்திலிருந்து வெளியான மூன்று லுக் போஸ்டர்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.

இந்நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தில் சகா, வடசென்னை, நெற்றிக்கண் ஆகிய படங்களில் நடித்த சரண் சக்தி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

etharkum thuninthavan

Published by
பால முருகன்

Recent Posts

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…

35 minutes ago

SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…

1 hour ago

குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!

சென்னை :  குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…

2 hours ago

“முதல்வர் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” – தமிழிசை சௌந்தரராஜன்.!

சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…

2 hours ago

விஜய்யை நெருங்கிய தொண்டர் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர்.!

மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…

3 hours ago

பஹல்காம் தாக்குதல் : 2வது முறையாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை.!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…

3 hours ago