வலிமை படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு ஏப்ரல் மாதம் ஸ்பெயின் நாட்டிற்கு செல்லவுள்ளது.
இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடித்துள்ளார் . மேலும் அஜித்திற்கு வில்லனாக கார்த்திகேயா நடித்துள்ளார்.
இந்த நிலையில் 500 நாட்களுக்கு மேலாக வலிமை படத்தின் அப்டேட் வராததால் ரசிகர்கள் அப்டேட் எப்போது வெளியாகும் என்று காத்திருந்த நிலையில், வலிமை படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1 அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் கடந்த 15 ஆம் தேதி தெரிவித்திருந்தார். இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளார்கள்.
இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்திற்கான கடைசி கட்ட படப்பிடிப்பு காட்சிகள் மீதம் 10 நாட்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் அந்த கடைசி கட்ட கட்சியை வருகின்ற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதல் எடுப்பதற்காக வலிமை படக்குழு ஸ்பெயின் நாட்டிற்கு செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…