வலிமை அஜித் படங்களில் மறக்க முடியாத படமாக இருக்கும் என வலிமை படத்தில் வில்லனாக நடிக்கும் கார்த்திகேயா தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் குமார் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தை அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மாகொண்டா நடித்துள்ளார். யோகி பாபு, புகழ், போன்ற சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். நேற்று கார்த்திகேயா பிறந்த நாளை முன்னிட்டு புதிய போஸ்டர் வெளியீடபட்டது.
அஜித் ரசிகர்களும் அஜித்துடன் இருக்குமாரு எடிட் செய்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நடிகர் கார்த்திகேயா தனது ட்வீட்டர் பக்கத்தில் ” அஜித் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் நன்றி..வலிமை திரைப்படம் அஜித் சார் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக இருக்கும்..” என குறிப்பிட்டுள்ளார்.
மற்றோரு ட்வீட்டில் “இது எனது நாளை மிகவும் சிறப்பானதாக ஆக்கியது ..
இப்போது நான் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்கிறேன்… ஆம் நான் வலிமையின் ஒரு பகுதி .. இந்த பெரிய சந்தர்ப்பத்திற்கு அஜித் சார்… ஹெச் வினோத் சார்.. போனிகபூர் சார் மிகவும் பெருமை மற்றும் நன்றி.. தரமான சம்பவம் இருக்கு..” என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…