வனிதா வீட்டில் நடந்த விசேஷம்..! தாய்மாமனாக வந்தது யார் தெரியுமா..?

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 முடிவடைந்தாலும் அதில் பங்கேற்று கொண்ட பிரபலங்கள் குறித்து செய்திகள் இன்னும் கசிந்து கொண்டே தான் இருக்கிறது. மற்ற இரண்டு சீசன்களில் முடிந்த இரண்டே நாளில் அதன் தாக்கம் குறைந்தது. ஆனால் மூன்றாவது சீசன் முடிந்து இரண்டு வாரத்திற்கு மேல் ஆகியும் இன்னும் ரசிகர்கள் மத்தியில் பிக்பாஸ் பிரபலங்களைப் பற்றிய சிறு தகவல் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் உள்ளனர்.
அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டில் சண்டை போட்டு, நியாயமான கேள்விகள் , பல சர்ச்சைகள் என ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் தனது வீட்டில் நடந்த சுபகாரிய குறித்து போட்ட வெளியிட்டுள்ளார்.
இவர் இரண்டு திருமணம் , குழந்தை கடத்தல் , சொத்து பிரச்சினை போன்ற பல பிரச்சினைகள் காரணமாக வனிதாவை ஒதுக்கி வைத்துவிட்டு நிலையில் தன்னுடைய மூத்த மகள் ஜோத்விகாவிற்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.
இதில் பிக்பாஸ் வீட்டில் கலந்து கொண்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். பிக்பாஸ் வீட்டில் வனிதா அண்ணன் என சேரனை அழைத்து வந்தார். இந்நிலையில் சேரன் , பாத்திமாபாபு லாஸ்லியா என பலர் கலந்து கொண்டனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் வனிதாவிற்கு ஒரு குடும்பம் உருவாகியிருப்பதாக பலர் கூறுகின்றனர்.மேலும் சேரனை அண்ணன் என வனிதா கூறுவதால் அவரை தாய்மாமனாக இந்த நிகச்சியில் கலந்து இருக்கலாம் என பலர் கூறி வருகின்றனர்.