வெனிசுலா நாட்டில் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்க நாடான வெனிசுலா நாட்டில் உள்ள மரிடா எனும் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாகாணத்தின் பல்வேறு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 1200-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது.
மேலும், வீடுகள் மற்றும் சாலைகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மரிடா மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 17 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பலர் படுகாயமடைந்துள்ளனர் மற்றும் சிலர் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில் தற்போதும் அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…
எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…
கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…
பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…