கால்நடை மருத்துவர்கள் தெரு நாய்களுக்கு அளிக்கும் சிகிச்சை!

மேற்கு ஆப்பிரிக்காவில் சில கால்நடை மருத்துவர்கள் இணைந்து தெரு நாய்களுக்கு சிகிச்சை அளித்து உணவு அளித்து வருகின்றனர்.
கொரானா வைரஸ் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்களே பலர் உணவின்றி, சரியான உறக்கம் இன்றி தவித்து வரக் கூடிய சூழ்நிலையில் விலங்குகள் என்ன செய்யும்? அதுவும் தெருவோரங்களில் இருக்கக்கூடிய உணவகங்களில் போடப்படும் மிச்ச மீதியை உண்டு வாழும் நாய்கள் அந்த உணவும் இல்லாமல் தற்பொழுது மிகவும் பாடுபட்டு வருகிறது. இந்நிலையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியேரா லியோனில் சில கால்நடை மருத்துவர்கள் இணைந்து தெருவில் சுற்றித்திரியும் நாய்களுக்கு சிகிச்சை அளித்து உணவு அளித்து வருகின்றனர்.
தலைநகர் ஃப்ரீ டவுனில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட தெருநாய்கள் உணவகங்களில் இருந்து அகற்றப்படும் மீத உணவுகளை உண்டு வந்த நிலையில், தற்போதைய ஊரடங்கால் உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டதால் உணவின்றி தவித்து வந்த நாய்களை இவர்கள் கண்டறிந்துள்ளனர். பல்வேறு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் நாய்களுக்கு உணவு அளித்து வரும் மருத்துவ குழுவினர் ஏராளமான நாய்களுக்கு தடுப்பூசி போட்டு சிகிச்சை அளித்தும் வருகின்றனர். இதன் மூலம் நோய் வாய்ப்பட்ட நாய்களால் மனிதர்கள் கடிபடுவது தடுக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025