1971-ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் விளைவாக பாகிஸ்தான் இராணுவம் தானாக முன்வந்து சரணடைந்தனர்.இதனால் கிழக்குப் பாகிஸ்தான் வங்காளதேசம் என்ற தனி நாடாக உருவானது. தங்களின் தோல்விக்குப் பிறகு டாக்காவில் ரமணா குதிரைப் பந்தைய மைதானத்தில் 93,000 பாகிஸ்தான் வீரர்கள் ஜெனரல் அமீர் அப்துல்லாகான் நியாஸி தலைமையில் இந்தியாவின் லெப்டினெண்ட் ஜெனரல் ஜெகத்சிங் சிங் அரோரா, தலைமையிலான கூட்டணிப் படைகளிடம் சரணடைந்தனர்.
இப்போரில் உயிர் இழந்த தங்கள் நாட்டு வீரர்களின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வருடந்தோறும் இந்தியா முழுவதும் வெற்றி நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் அன்று இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியவாயிலில் (India Gate) உள்ள அமர் ஜவான் ஜோதியில் முப்படைகளின் தளபதிகளுடன் இணைந்து நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அஞ்சலி செலுத்துகின்றார்.
அதேபோல் பெங்களூரில் உள்ள தேசிய இராணுவ நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. குடிமக்கள், மாணவர்கள், மூத்த அரசு அதிகாரிகள், முன்னாள் இராணுவத்தினர் ஆகியோர் ஆண்டுதோறும் டிசம்பர் 16 அன்று மலரஞ்சலி செலுத்தி வீரர்களின் தியாகத்தை நினைவு கூறுகின்றனர்.
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…
கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…