வியன்னாவில் பயங்கரவாதத் தாக்குதல்.! 5 பேர் உயிரிழப்பு.!

Published by
Ragi

ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் தேவாலயத்தை சுற்றி 6 இடங்களில் பயங்கரவாதத் தாக்குதல் நடைப்பெற்றதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆஸ்திரியாவின் தலைநகரான மத்திய வியன்னாவில் தேவலாயத்தை சுற்றி 6 இடங்களில் சில பயங்கரவாதிகளால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டதாகவும், 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வியன்னாவின் 6 இடங்களில் ஆயுதம் ஏந்திய சிலர் தான் தாக்குதல் மேற்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தாக்குதலை தொடர்ந்து ஆஸ்திரியா உள்துறை அமைச்சர் கார்ல் நெஹம்மர் பொது போக்குவரத்தை தவிர்க்குமாறும், நகரத்தின் மையத்தில் இருந்து விலகி இருக்குமாறும் எச்சரித்தார். மேலும் நகர எல்லையில் சோதனை வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், செவ்வாயன்று குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்றும் கார்ல் நெஹம்மர் கூறியிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், வியன்னாவில் நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலை கேட்டு ஆழ்ந்த அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஆஸ்திரியாவுடன் நிற்கிறது என்றும், எனது எண்ணங்கள் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களிடமும், அவரது குடும்பத்தினரிடமும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Deeply shocked and saddened by the dastardly terror attacks in Vienna. India stands with Austria during this tragic time. My thoughts are with the victims and their families.

— Narendra Modi (@narendramodi) November 3, 2020

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

13 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

14 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

15 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

15 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

17 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

18 hours ago