நயன்தாரா நெற்றியில் முத்தம் கொடுத்து காதலை வெளிப்படுத்தும் விக்னேஷ் சிவனின் அழகான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கூறலாம். 2015ல் வெளியான நானும் ரவுடி தான் படத்தின் மூலம் தான் இவர்கள் இருவரின் காதல் ஆரம்பித்தது என்பது அனைவரும் அறிந்ததே. லிவ்விங் ரிலேஷன்சிப்பில் இருக்கும் இந்த ஜோடியின் வீட்டிற்குள் இருந்து சமூக விலகலை கடைபிடித்து வருகின்றனர். தற்போது நயன்தாரா ஆர். ஜே. பாலாஜியுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி நயனதாரா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.மேலும் காதலான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரண்டு காதல் படத்திலும் நடிக்கவுள்ளார். மேலும் அடிக்கடி அவர்கள் இருவரும் இணைந்துள்ள புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன். இவர்களது திருமணம் விரைவில் இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.
நேற்றைய தினம் இவர்கள் குழந்தைகளாக மாறி கொரோனா வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது. இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா நெற்றியில் முத்தம் கொடுக்கும் அழகான காதல் நிறைந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலர் சிறந்த காதல் ஜோடி என்றும், விரைவில் திருமணம் செய்யுங்கள் என்றும் கேட்டு வருகின்றனர். தற்போது அந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…