விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய தலைவர்களை விஜய் நியமித்துள்ளார் .
நடிகர் விஜய் “அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம்” என்ற பெயரில் பல சமூக பணிகளை செய்து வருகிறார் . இதனால் அவரது ரசிகர்கள் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகின்றனர் . இதனையடுத்து சமீபத்தில் விஜய் அவர்களின் தந்தையும் , இயக்குநருமான எஸ்ஏ சந்திரசேகர் தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தார் .
அதனை கேள்விப்பட்ட விஜய் அந்த கட்சிக்கும் , தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும்,யாரும் அக்கட்டுரையில் சேர வேண்டாம் என்றும் கூறியதுடன் , தனது பெயரோ அல்லது புகைப்படமோ அந்த கட்சிக்காக பயன்படுத்தினால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார் . இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் , தந்தை மற்றும் மகன் இடையே உள்ள மோதலும் பெரிதாக பேசப்பட்டது.
இதனையடுத்து தமிழகத்தில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தில் மொத்தமாக 200 மாவட்ட நிர்வாகிகள் உள்ள நிலையில் திருச்சி , கரூர் , பெரும்பலூர் உள்ளிட்ட 30 மாவட்டங்களில் உள்ள 50 மாவட்ட நிர்வாகிகளை விஜய் தனது சென்னையில் உள்ள பனையூர் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்பட்டது .
இந்த நிலையில் தற்போது தனது விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய மாவட்ட தலைவர்கள், இளைஞரணி தலைவர்கள், தொண்டரணி தலைவர்கள், மாணவர் அணி தலைவர்கள், வர்த்தக அணி தலைவர்கள் என சென்னை , கோவை, திருச்சி, மதுரை, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை விஜய் நியமனம் செய்துள்ளார் . மேலும் தனது புகைப்படம், இயக்கத்தின் பெயர் , கொடி உள்ளிட்டவைகளை பயன்படுத்த மாவட்ட பொறுப்பாளர்கள், அணி தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் ஆகியோரின் அனுமதி பெற வேண்டும் என்றும் , இதனை மீறுபவர்கள் மீது இயக்கத்தின் சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…
சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன்…
ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே…
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி மேகரையன் தோட்டத்தில் வசித்து வந்த முதிய தம்பதியான ராமசாமி (வயது 72)…
ஏமன் : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, ஏமனில் 2017-ம் ஆண்டு ஏமன் குடிமகன் தலால் அப்தோ மெஹதியைக்…