விஜய் சேதுபதிக்கு ஆதரவாக பேசி நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்தை ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விஜய் சேதுபதி, கடந்தாண்டு தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் நம்ம ஊரு ஹீரோ என்னும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் கடவுளை குளிப்பதை காட்டுகிறார்கள், ஆனால் டிரஸ் அணிவதை திரை போட்டு மூடுகிறார்கள் என்று நகைச்சுவையாக பேசியுள்ளார். இந்த பேச்சால் இந்துக்களை தவறாக சித்ததரித்ததாக கூறி சில மதவாதிகள் விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாக பேசி வருகின்றனர். அந்த வீடியோவால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் விஜய் சேதுபதியின் மீது இதற்காக அகில இந்திய இந்துமகா அமைப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது மேலும் அவரது ரசிகர் மன்றம் சார்பில் விஜய் சேதுபதியின் பெயரை துஷ்பிரயோகம் செய்யும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். அதோடு விஜய் சேதுபதி சொந்த கருத்தை பேசவில்லை என்றும், ஏற்கனவே நடிகரும், நாடக ஆசிரியருமான கிரேஸி மோகன் கூறியதை தான் அவர் எடுத்துக் கூறியிருந்தார் என்றும் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக பேசி நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்தை ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் விசுவாசிகளுக்கும், கோவில் மற்றும் சடங்குகளை புனிதமாக கருதுபவர்களுக்கும் இந்த விஷயம் நிச்சயமாக மனதை புண்படுத்தும் என்றும், வேறு எந்த மதத்தின் மத நடைமுறைகளையும் யாரும் கேலி செய்ய துணிய மாட்டார்கள் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இதை அவர் எப்போது கூறினார் என்று ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு மீண்டும் ஒருமுறை சரி பாருங்கள் என்று கூறியுள்ளார்
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…