தளபதி 65 படப்பிடிப்பிற்காக ஜார்ஜியாவுக்கு நடிகர் விஜய் நேற்று இரவு சென்றுள்ளார்.
நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான பூஜை கடந்த மாதம் 31 ஆம் தேதி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து படப்பிடிப்பும் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த நிலையில் அடுத்ததாக முதற்கட்ட படப்பிடிப்பு தேர்தல் முடிந்த பிறகு தொடங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், நேற்று இரவு நடிகர் விஜய் சென்னையில் இருந்து விமானத்தின் மூலம் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா நாட்டிற்கு சென்றுள்ளார்.
மேலும் படக்குழுவினர் அங்கு ஏற்கனவே சென்று படத்திற்கான செட் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். மேலும் இன்று முதல் தளபதி 65 படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…