தல உட்பட அனைத்து நடிகர்களையும் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்து விஜய் அவர்கள் சாதனை படைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் அதிக அளவில் வசூலை பெற்றது மட்டுமில்லாமல் பிளாக் பஸ்டர் ஹிட்டுமானது. தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் மற்றும் டீசர் தான்.
தற்போது இவரது பிறந்தநாளை கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். கடந்த மாதமே அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் விஜய் ரசிகர்கள். ஆம் தளபதியின் பிறந்தநாளை கொண்டாட காமன்டிபி, ஹேஷ்டேக் என உருவாக்கி பெரும் எதிர்பார்ப்பில் தயாராகி வருகின்றனர்.அந்த வகையில் நேற்றைய தினம் விஜய்யின் பிறந்தநாளுக்கான காமன் டிபியை #THALAPATHYBdayFestCDP என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி 20க்கும் மேற்பட்ட பிரபலங்களால் வெளியிடப்பட்டது. சமூக வலைத்தளங்களில் வைரலான அந்த காமன் டிபி தற்போது வரை 5.3 மில்லியன் வரை டூவிட்களை பெற்று இதுவரை யாரும் செய்யாத சாதனையை படைத்துள்ளது. ஆம் தலயின் பிறந்தநாளுக்கு வெளியான காமன் டிபி 4.6 மில்லியன் டூவிட்களையும், ஜூனியர் என்டிஆர் அவர்களின் பிறந்தநாள் சிடிபி 5.2 மில்லியன் டூவிட்களையும் பெற்றிருந்தது. தற்போது அவை அனைத்தையும் முறியடித்து தளபதி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதனை விஜய் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…