Vijayakanth [file image]
சினிமாவில் சாப்பாடு போடு அதனை ரசித்து மக்களின் பசியை போக்கிய மனிதர் என்றால் நடிகர் விஜயகாந்த் என்று கூறலாம். அந்த அளவிற்கு இவருடைய படங்களை பார்த்து இவருக்கு ரசிகர்கள் அதிகமானதை விட இவருடைய குணத்தை பார்த்து ரசிகர்கள் அதிகமானது ஏராளம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு கேட்காமல் உதவி செய்வது பசி என்று வருபவர்களுக்கு சாப்பாடு போடுவது என பல உதவிகளை செய்து இருக்கிறார்.
இப்படி பட்ட நல்ல குணம் கொண்ட விஜயகாந்த் அதிகமாக கோபபடும் விஷயமும் சாப்பாட்டுக்காக தானாம். குறிப்பாக சாப்பிட வருபவர்களை சரியாக கவனிக்கவில்லை என்றால் விஜயகாந்திற்கு கெட்ட கோபம் வந்துவிடுமாம். அப்படி ஒரு முறை மட்டன் இல்லை என்று மேனஜர் ஒருவர் சாப்பிட வந்தவர்களிடம் சற்று கறார் காட்டி பேசினாராம்.
இதனை பார்த்துக்கொண்டிருந்த விஜயகாந்த் வேகமாக சென்று அந்த மேனஜர் கன்னத்தில் அறைந்துவிட்டாராம். இந்த தகவலை அவருடன் இருந்த நடிகரும் சினிமா விமர்சகருமான மீசை ராஜேந்திரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கேப்டன் விஜயகாந்த் படப்பிடிப்பின் போது இடைவேளை நேரம் வந்ததும் பிரேக் எடுக்கமாட்டார்.
விஜயகாந்துடன் நடிக்க மறுத்த டாப் நடிகைகள்? லிஸ்ட்டை வெளியிட்ட மூத்த நடிகை!
கீழே சென்று சாப்பாடு எப்படி போகிறது நல்ல சாப்பிடுகிறீர்களா இல்லையா? சாப்பாட்டில் யாருக்காவது குறை இருக்கிறதா? எல்லாருக்கும் சரியாக சிக்கன் மட்டன் இருக்கிறதா? என்று கேட்டுவிட்டு பார்ப்பார். அப்படி பார்த்துவிட்டு எல்லாரும் சாப்பிட்டுவிட்டு முடித்த பிறகு தான் விஜயகாந்த் கடைசியில் தான் சாப்பிடுவார்.
அப்படி ஒரு முறை சாப்பாடு நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஒரு 13 பேருக்கு சரியான சாப்பாடு இல்லை சரியான சிக்கன் மட்டன் எதுவும் இல்லை. அப்போது மட்டன் இருக்கிறதா? என்று அந்த 13 பேரில் சிலர் கேட்க அதற்கு மேனஜர் மட்டன் எல்லாம் இல்லை என்று சற்று கறார் காட்டி பேசிவிட்டார். இதனை அங்கு இருந்து விஜயகாந்த் பார்த்துவிட்டார்.
பார்த்துவிட்டு வேகமாக அங்கு இருந்து வந்தார். கேப்டன் எப்போதுமே கோபபட்டுவிட்டால் பேசலாம் மாட்டார் அடித்துவிடுவார். அதைப்போல அந்த கறார் காட்டிய மேனஜருக்கு விஜயகாந்த் கன்னத்தில் ஒரு அடியை போட்டுவிட்டார். போட்டுவிட்டு என்ன நீ இப்படி பேசுகிறாய்? அவர்கள் சாப்பிட வந்து இருக்கிறார்கள் சரியாக சாப்பாடு போடவேண்டாமா? எல்லாருக்கும் நான் வாங்கிவிட்டு வர சொன்னேன்.
பிறகு எதற்காக அவர்களுக்கு மட்டும் சிக்கன் மட்டன் எதுவும் இல்லாமல் வெறும் குழம்பை மட்டும் கொடுத்தால் எப்படி நன்றாக இருக்கும் என்று கேட்டுவிட்டு கையில் இருந்த பணத்தை எடுத்து கொடுத்து உடனடியாக போய் அவர்களுக்கு மட்டனை வாங்கி கொண்டு வர சொன்னார். அது தான் கேப்டன்” என புகழ்ந்து பேசியுள்ளார் மீசை ராஜேந்திரன். இப்படி மக்களின் பசியை போக்கிய விஜயகாந்த் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…