நண்பன் படத்தில் விஜய் அவர்களின் கன்னத்தில் அறைந்த காட்சியில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவத்தை நடிகை அனுயா வெளிப்படையாக கூறியுள்ளார்.
இந்தியில் 3 இடியட்ஸ் என்ற பெயரில் அமீர்கான், மாதவன், சர்மான் ஜோஷி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படத்தின் ரீமேக் தான் நண்பன். ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா, அனுயா, சத்யன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டானது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இந்த படத்திற்கு மனோஸ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தின் ஷூட்டிங்கில் நடந்த சம்பவத்தை குறித்து அனுயா கூறியுள்ளார்.
அதாவது அந்த படத்தில் அனுயா பிரசவ வலியில் அழுகின்ற போது விஜய் பிரசவத்தை பார்க்கும் காட்சியில் அனுயா விஜய்யின் கன்னத்தில் அறைந்து விடுவார். அந்த காட்சியில் முதலில் தளபதியை எப்படி நான் அடிப்பது என்று யோசித்ததாகவும், அதனையடுத்து விஜய்யின் கன்னத்தில் மெதுவாக தட்டியதை பார்த்த ஷங்கர் சார் நீங்கள் நல்ல நடிகை என்று நினைத்தேன் என்று கூறினார். அவரை எப்படி நான் அறைவது என்று கேட்ட போது இது நடிகர் விஜய் என்று நினைக்காமல் படத்தில் வரும் பாரிவேந்தன் என்று நினைத்து கொண்டு அடியுங்கள் என்று கூறினார். அதன் பிறகு தான் தான் விஜய்யை வேகமாக அறைந்ததாக கூறியுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…