ரஷ்யாவில் நடைபெற்று வரும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து விக்ரமின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படங்களில் ஒன்று கோப்ரா.ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் விக்ரம் ஏழு வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த படத்தை இமைக்கா நொடிகள் என்ற வெற்றி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்க 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தியில் உருவாகும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் மும்மரமாக நடைபெற்று வருகிறது.அங்கிருந்து ரசிகர் ஒருவர் விக்ரமுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.அதில் விக்ரம் கை முழுக்க டாட்டு மற்றும் கிட்டார் பேக்,தாடி மீசையை வளர்த்து செம ஸ்டைலிஷ் லுக்கில் உள்ளார் .இந்த கெட்டப் கோப்ரா படத்திலுள்ள விக்ரமின் 7 கெட்டப்களில் ஒரு கெட்டப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில்…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர்…
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…
டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…