6,300 அடி பள்ளத்தாக்கின் உச்சியில் இருந்து 2 பெண்கள் கீழே விழுந்தனர்.
ரஷ்ய குடியரசான தாகெஸ்தானில் உள்ள சுலக் பள்ளத்தாக்கு 6,300 அடி உயரம் கொண்டது. இந்த பள்ளத்தாக்கின் விளிம்பில் ஊஞ்சல் ஓன்று உள்ளது. இந்த பள்ளத்தாக்கிற்கு வரும் பலர் அதில் விளையாடுவது வழக்கம். சமீபத்தில், சுலக் பள்ளத்தாக்கின் விளிம்பில் ஊஞ்சல் ஆடும்போது 2 பெண்கள் கீழே விழுந்தனர்.
இதுகுறித்து சமூகவலைத்தளங்களில் வெளியான வீடியோவில் 6,300 அடி குன்றின் மேல் இரண்டு பெண்கள் ஊஞ்சல் சவாரிக்கு அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது. அவர்கள் உட்கார்ந்த பிறகு, பின்னால் இருந்து ஒருவர் ஊஞ்சலில் தள்ளப்படுவதை பார்க்கலாம். இந்த ஊஞ்சல் சவாரியை மகிழ்ச்சியுடன் 2 பெண்களும் பயணம் செய்தனர்.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக ஊஞ்சலின் செயின் அறுந்தது. இதனால் அவர்கள் பள்ளத்தாக்கில் நிலை தடுமாறி விழுந்தனர். பின்னால் இருந்து ஊஞ்சலை தள்ளிய நபர் ஊஞ்சலை வேகமாக தள்ளாததால் ரொம்ப தூரம் ஊஞ்சல் செல்லவில்லை. பள்ளத்தில் கீழே விழுந்த அந்த 2 பெண்களும் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…