நானே வருவேன் திரைப்படத்தில் தனுஷிற்கு தம்பியாக விஷ்ணு விஷால் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
10 ஆண்டுகளுக்கு நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் பிறகு நானே வருவேன் படத்தில் இணையவுள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் தேதி வெளியானது.
படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நானே வருவேன் பெயரில் வணிக சாயல் இல்லை என்றும், பெயரை மாற்ற வேண்டும் என்றும் செல்வராகவனிடம் வற்புறுத்தியதால் அவர் கதையை கேக்ங் ஸ்டார் கதையை மையபடுத்தி மாற்றிவிட்டதாகவும், படத்துக்கு “ராயன்” என்ற பெயரை வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதைபோல் இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தனுஷுக்கு தம்பியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. வருகின்ற ஜூலை 28 – ஆம் தேதி தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு படம் குறித்த அப்டேட்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…