விலங்குகளை பார்த்து பயம் இல்லை மனிதர்களை பார்த்து தான் பயம் என்று நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.
இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் நடிகர் ராணா மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காடன். இந்த திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கான டிரைலர் மற்றும் ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடித்த அனுப்பவம் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் கூறுகையில், ” நான் எனது சிறிய வயதில் யானைகளை பார்த்து மிகவும் பயப்படுவேன். படத்தில் நடித்துள்ள யானைகளை முதன்முதலாக நான் பார்த்த பொழுது எனக்கு ரொம்ப பயமா இருந்தது. கடந்த மூன்று வருடங்களாக என் வாழ்க்கையில் நடந்தவைகளை பார்க்கும்போது மனிதர்களைவிட விலங்குகள் மேல் என்று புரிந்து கொண்டேன். அதற்கு பிறகுதான் மனிதர்களை பார்த்து பயப்பட வேண்டும் என்று புரிந்தது. யானைகள் கூட பாசமாக இருக்கிறது. மனிதர்கள் அப்படி இல்லை இதை என்னுடைய அனுபவத்தில் இது நான் சொல்கிறேன்.
யானைகளுக்கு நினைவாற்றல் அதிகமாக இருக்கிறது நான் யானையுடன் நடித்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. இன்று நான் போய் அந்த பக்கத்தில் நின்றாலும் என்னை அடையாளம் கண்டுபிடித்துவிடும். யானை வெள்ளத்தை விரும்பி சாப்பிடும் அதனுடைய நடித்த காட்சிகளில் எல்லாம் நான் யானைகளுக்கு வெல்லத்தை கொடுத்துவிடுவேன். யானை நன்றியை யானை பாசமாக வெளிப்படுத்தும் எனவே விலங்குகளை பார்த்து எனக்கு பயமில்லை ” என்றும் கூறியுள்ளார்.
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…