கொரோனா வைரஸ் மோசமானது, அதன் விளைவை இனிமே தான் சந்திக்க போகிறோம் என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனா உஹான் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா என்ற கோவிட் 19 வைரஸ் சுமார் 200 நாடுகளை மிரட்டி வருகிறது. இதனால் தினந்தோறும் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். இருந்தாலும் வைரஸில் தாக்கம் குறையாமல் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதுவரை உலகளவில் 25,57,806 பேர் பாதிக்கப்பட்டு, 1,77,674 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் இந்த கொரோனா என்ற பெருந்தொற்று காலத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து செயலாற்றுவதே அவசியம் என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
கொரோனா வயசில் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இதனால் வழங்கி வந்த நிதியையும் நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கொரோனா வைரஸை அரசியல் ஆகாதீர்கள் என்றும் அது நோய்த்தொற்றை அதிகரிக்க செய்யும் என செய்தியாளர்களிடம் சுகாதார அமைப்பின் இயக்குநர் கூறியுள்ளார். மேலும் ஒன்றாக இணைந்து கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டும் எனக் கூறிய டெட்ரோஸ் அதானோம், கொரோனா வைரஸ் மிக மோசமானது என்றும் அதன் விளைவை இனிமே தான் சந்திக்க போகிறோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…
சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…