இந்திய மாணவர்களுக்கு உதவ முயற்சி மேற்கொண்டுள்ளோம் – உக்ரைன் தூதர்

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களுக்கு உதவ முயற்சி மேற்கொண்டுள்ளோம் என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா ராணுவம் கடந்த 5 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரைனில் சில நகரங்களை கைப்பற்றியுள்ளது. இதற்கிடையில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்து வருகின்றனர். மேலும், உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களுக்கு உதவ முயற்சி மேற்கொண்டுள்ளோம் என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், உக்ரைன் அதிபரிடம் இந்திய மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!
May 22, 2025
LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!
May 22, 2025