விரைவில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை முடிப்போம் என மணிரத்னம் என்று கூறியுள்ளார்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் படப்பிடிப்பானது கடந்தாண்டு தாய்லாந்தில் வைத்து தொடங்கப்பட்டது. அதன் பின் கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்ட படத்தின் படப்பிடிப்பை ஜனவரியில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து மீண்டும் தொடங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு 70 % விகிதம் முடிவடைந்துள்ளது. அதன் பிறகு கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மீண்டும் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இயக்குனர் மணிரத்னம் தற்போது அளித்துள்ள பேட்டியில், “பொன்னியின் செல்வன் படத்துக்கான இன்னும் ஒரு கட்ட படப்பிடிப்பு முடியவில்லை. தற்போதைய சூழ்நிலையில் படப்பிடிப்பை நடத்துவது கஷ்டம். அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கையும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டி உள்ளது. விரைவில் படப்பிடிப்பை முடிப்போம் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…