கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்காவிட்டால் 2022-ஆம் ஆண்டு வரை தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய அவசியம் வரும் என்று ஹார்வேர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தற்போது உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது.எனவே கொரோனா பரவாமல் இருக்க தனிமனித இடைவெளி அவசியம் என்று உலக நாடுகள் அனைத்தும் வலியுறுத்தி வருகின்றது.இதற்காக உலகில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் மக்கள் வீடுகளிலே முடங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் பொதுசுகாதார பள்ளி நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.அதில் ,கொரோனா வைரஸிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் தனி மனித இடைவெளியே கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2003- ஆம் ஆண்டு சிறிய அளவில் தலைதூக்கிய சார்ஸ் வைரஸ் ,சிறிய இடைவெளிக்கு பின்னர் பெரிதாக பரவியதை குறிப்பிடப்பட்டுள்ளது.அதேபோல் கொரோனாவும் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு சீனாவையும் உதாரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு குளிர்காலத்திலும் கொரோனா தலை தூக்க வாய்ப்பு உள்ளதால் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது அவசியம்.மருந்து கண்டுபிடிக்கும் வரை 2022-ஆம் ஆண்டு வரை தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய அவசியம் வரும்.இதனால் மட்டுமே மனிதர்களை காப்பாற்ற முடியும்.குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதனை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…