ஹிந்தியில் கல்லி பாய், தேவ் டி, ஏ ஜவானி ஹாய் திவானி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் கல்கி கோச்சலின். இவர் தமிழில் அஜித்குமாரின் நேர் கொண்ட பார்வை படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் வருவார். பின்னர் இவர் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். கல்கி கோச்சலின், இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப்பை காதலித்து திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். தற்போது இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஹெல்ஸ்பர்க் என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் ஒன்றாக வசிக்கின்றனர். கல்கி கோச்சலின் இப்போது கர்ப்பமாக இருக்கிறார்.
இந்நிலையில், கல்கி கோச்சலின் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றியில், நான் நடிகையாக பல வேதனைகளை சந்தித்து இருக்கிறேன். இந்தியில் தேவ் டி படம் வெளியானபோது என்னை விலைமாது (Prostitute) என்று அழைத்தனர். இதனால் மிகவும் மன உளைச்சல் ஏற்பட்டது. பின்னர் ஹாலிவுட் படங்களிலும் இதே போன்று பிரச்சினையை சந்தித்தேன். என்னை ஒரு தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்தார்.
மேலும், அவர் என்னை தனியாக வெளியே அழைத்து செல்லவும் முயற்சித்தார். அதற்கு நான் மிகவும் கடுமையாக மறுத்து விட்டேன். இதனால் அவருடைய படத்தில் இருந்து என்னை நீக்கி விட்டார். அதனிடையே நான் நடித்த ஏ ஜவானி ஹாய் திவானி படம் வெற்றி படமாக எனக்கு அமைந்தது. ஆனாலும் யாரும் எனக்கு பட வாய்ப்பு தரவில்லை என கல்கி கோச்சலின் தெரிவித்தார்.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…