நம் வாழ்வில் கெட்ட நேரம் நீங்கி நல்ல நேரம் கூடிவர இந்த பூஜையை செய்தாலே போதும்!

Published by
மணிகண்டன்
  • நம் வாழ்வில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். அதுபோல நல்ல நேரம், கெட்ட நேரம் மாறி மாறி வரும்.
  • தொடர்ந்து நல்ல நேரம் மட்டுமே வந்தால், கடவுள் இருப்பதை மறந்துவிடுவோம். அதனால்தான் அவ்வபோது கொஞ்சம் கெட்ட நேரமும் நம்மை தேடி வரும்.

சிலருக்கு வெற்றியானது எளிதில் கிடைத்து விடும். ஆனால், பலருக்கு வெற்றியானது கடுமையான முயற்சி செய்தால் தான் கிடைக்கும். சிலருக்கு அப்படி கடுமையாக உழைத்தாலும் கிடைப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் பெரும்பாலானோர் நமக்கு மட்டும் ஏன் கடவுள் இப்படி செய்கிறார் என நொந்து கொள்கின்றனர்.

ஒருவருக்கு வாழ்வில் தோல்வி ஏற்படவில்லை என்றால் அவர் கடவுளை நினைத்து கூட பார்க்க மாட்டார். அதனால் தான் வெற்றியும், தோல்வியும் மனிதனுக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து தோல்வி ஒருவர் பெற்று வந்தால் அது அவரது தவறில்லை. கண்டிப்பாக வெற்றி அவரை தேடி வரும். தோல்வி என்பது தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. அந்த தோல்வியின் மூலம் நீங்கள் கற்று கொள்ளாமல் இருந்தால் தான் அது உங்களுக்கு உண்மையான தோல்வி.

தோல்வியை தவிர்த்துவிடலாம். ஆனால், கெட்ட நேரத்தை எவ்வாறு தவிர்ப்பது என்று இப்போது பார்க்கலாம். நமக்கு நல்ல நேரம் கூடிவந்து வெற்றியை கொடுக்க நமது ஜாதகத்தில் ராகு சிறப்பாக அமைய வேண்டும். அந்த ராகு தெய்வத்தின் அருள் கிடைக்க சில பூஜைகள் செய்ய வேண்டும்.

ராகுவிற்கு மிகவும் உகந்த பொருள் உளுந்து அல்லது கோமேதக கல். கோமேதகம் கல் மிகவும் விலை உயர்ந்தது. அதனால் அதனை வசதி படைத்தவர்கள் மட்டுமே வாங்க முடியும். ஆனால் உளுந்து என்பது நம் அனைவராலும் வாங்க கூடிய பொருள். இந்த உளுந்தை வாங்கி கோவிலில் ராகு மூலமும் முன்பு வைத்தும் வழிபடலாம். அல்லது துர்க்கை அம்மன் முன்பாக வைத்து ஓம் துர்காயை நமஹ என்னும் மந்திரத்தை 108 முறை கூறவேண்டும்.

அப்படி கூறி முடித்து தங்களுக்கு தேவையானதை வேண்டிக்கொள்ள வேண்டும். இப்படி செய்தால் நமக்கு நல்ல நேரம் கூடி வரும். அதே போல அந்த உளுந்தை நாம் வீட்டிற்க்கு கொண்டு வரலாம். அல்லது கோவிலில் தானமாக கொடுத்துவந்தால் மிகவும் நல்லது. கோமேதக கல்லை வாங்க வசதி படைத்தவர்கள் அந்த கல்லை வாங்கி வீட்டு பூஜை அறையில் வைத்து செவ்வாய்க்கிழமை தோறும் குங்கும பூஜை செய்யவேண்டும். அவ்வாறு செய்து அந்த குங்குமத்தை எடுத்து தினமும் நெற்றியில் பூசிக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நமது கெட்ட நேரம் விலகி, நல்ல நிறம் நம்மை தேடி வரும். நீங்கள் நினைத்த காரியம் வெற்றியுடன் சுலபமாக முடியும்.

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

7 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

8 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

8 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

8 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

9 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

9 hours ago