இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள ராமச்சரனின் 15வது படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் .இவர் பல ரீமேக் படங்களையும் இயக்கி வெற்றியும் பெற்றுள்ளார் . கடைசியாக இவர் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரை வைத்து இயக்கிய 2.0 உலகளவில் பெரும் வெற்றியை பெற்றது. தற்போது அவர் விரைவில் கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பானது சில பல பிரச்சனைகளால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகரான ராம் சரணின் 15 வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து அந்த படத்தில் ராமச்சரனிற்கு ஜோடியாக நடிகை யார் நடிக்கப்போகிறார் என்றும் யார் இசையமைக்கப்போகிறார் என்றும் தகவல்கள் பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த படத்திற்கு யார் இசையமைக் கப்போகிறார் என்பதை குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது ஆம், இந்த படத்திற்க்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளாராம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…