கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் நவரசா வெப் தொடரில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரயாகா மார்ட்டின் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் சூர்யா தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நவரசா எனும் வெப்தொடரில் நடித்து வருகிறார் . நெட்ஃபிளிக்ஸ் தளத்திற்காக மணிரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சாபகேசன் தயாரித்துள்ள இந்த ஆந்தாலாஜி வெப் தொடரின் ஒரு பிரிவினை கௌதம் மேனன் இயக்குகிறார். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் பிரிவில் சூர்யா நடித்துள்ளார். படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
பாடகராக நடித்துள்ள சூர்யாவின் லுக் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.அதனையடுத்து படப்பிடிப்பு தளத்தில் உள்ள புகைப்படங்களை வெப்தொடரில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பி.சி. ஸ்ரீராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததும் ,அது வைரலானதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் நவரசா வெப் தொடரில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகையான பிரயாகா மார்ட்டின் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பிரபல மலையாள நடிகையான இவர் தமிழில் மிஷ்கின் இயக்கிய”பிசாசு”படத்தின் மூலம் அறிமுகமானவர்.தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜீவா மற்றும் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள “களத்தில் சந்திப்போம்” படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.சூர்யாவுக்கு ஜோடியாக பிரயாகா நடிக்கிறாரா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும்.இந்த வெப்தொடர் அடுத்தாண்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…