கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் காக்க காக்க படத்தின் இரண்டாம் பாகத்தில் விஷால் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2003ம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்து வெளியான திரைப்படம் காக்க காக்க. இந்த திரைப்படம் சூர்யாவின் திரைப்பயண வாழ்க்கையை மாற்றியமைத்த படங்களில் ஒன்றாகும். அன்பு செல்வன் என்ற ஐபிஎஸ் அதிகாரியாக சூர்யா நடித்து கலக்கியிருப்பார். ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் பாக்ஸ் ஆபீஸிலும் வசூலை குவித்தது.
16ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கௌதம் மேனன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சூர்யா அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகியுள்ளதால் காக்க காக்க படத்தின் இரண்டாம் பாகத்தில் விஷால் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே விஷால் சத்யம் என்னும் படத்தில் போலீசாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். காக்க காக்க படத்தின் இரண்டாம் பாகத்தில் விஷால் நடிப்பது உண்மையா என்பது தெரியவில்லை. இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும்.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…