நடிகர் தனுஷின் 44 வது திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.இந்த இரண்டு படங்களும் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
அதை தொடர்ந்து தற்போது கார்த்திக் நரேனுடன் “D43” படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு இன்றுடன் முடிந்துள்ளது. மேலும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இரண்டு மாதங்கள் கழித்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் தனுஷ் தற்போது அமெரிக்காவிற்கு சென்று தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் . இந்த படத்தின் நாளை முதல் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படங்களை தொடர்ந்து நடிகர் தனுஷின் 44 வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் அந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பார் என்றும் கடந்த ஆண்டு அறிவித்தனர். மேலும் அந்த படத்தை எந்த இயக்குனர் இயக்கப்போகிறார் என்ற தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. ஆம் தனுஷின் 44 வது திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…