ஏன் இந்த பாகுபாடு? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய நடிகை குஷ்பூ!

Published by
லீனா

மஹாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டனர். அப்போது பிரதமர் மோடி மகாத்மா காந்தி குறித்த குறும்படம் ஒன்றை வெளியிட்டார். பின் திரைத்துறையினரிடம் கலந்துரையாடிய பிரதமர், தண்தியில் உள்ள அருங்காட்சியகத்தை அனைவரும் பார்வையிடுமாறு தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருடனும் இணைந்து பிரதமர் மோடி திரைப்படம் எடுத்துக் கொண்டார். இதுகுறித்து பிரதமர் தனது ட்வீட்டர் பக்கத்தில், திரையுலக பிரபலங்களை சந்தித்தது மகிழ்ச்சி என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து நடிகையும், காங்கிரஸ் நிர்வாகியுமான குஷ்பூ தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘பிரதமரை சந்தித்த அணைத்து இந்திய கலைகனர்களையும் மதிப்பதாகவும், அதே சமயம் ஹிந்தி சினிமா மட்டும் இந்திய பொருளாதாரத்தை உயர்த்தவில்லை என்பதை பிரதமர் மோடிக்கு நினைவுபடுத்த விரும்புவதாக கூறியுள்ளார்.
தென்னிந்திய சினிமா பெரும் பங்கு வகிப்பதாகவும், அத்துடன் உலக அளவிற்கு தேசத்தை கொண்டு சென்றுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் பிரதமர் மோடியிடம், ஏன் தென்னிந்திய கலைஞர்களை அழைக்கவில்லை? ஏன் இந்த பாகுபாடு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Recent Posts

அமுல் பால் விலை ரூ.2 உயர்வு.., இன்று முதல் அமல்.!

அமுல் பால் விலை ரூ.2 உயர்வு.., இன்று முதல் அமல்.!

சென்னை : இந்தியாவின் பிரபல பால் பிராண்ட்டாக திகழும் அமுல் தனது பால் விலையை உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு மே…

32 minutes ago

Live : மே 1 உழைப்பாளர் தினம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை: இன்று (மே 1, 2025) உலக உழைப்பாளர் தினம் (International Workers' Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள்…

58 minutes ago

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்தது.! எவ்வளவு தெரியுமா?

டெல்லி : ஒவ்வொரு புதிய மாதம் தொடங்கியதும், மாதத்தின் முதல் நாள் அன்று பல மாற்றங்களும் நடைமுறைக்கு வருகின்றன. வழக்கமாக…

2 hours ago

வெல்லப்போவது யார்.? ராஜஸ்தான் – மும்பை இன்று பலப்பரீட்சை.!

ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 இன் 50வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

2 hours ago

கொளுத்தும் வெயில்.., “குழந்தைகள், கர்ப்பிணிகள் வெளியே வராதீங்க” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரை.!

சென்னை : தமிழகத்தில் இன்று முற்பகல் வரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நண்பகலில் வெயில் தாக்கம் படிப்படியாக அதிகரிக்ககூடும். தமிழகத்தில்…

3 hours ago

முதல் அணியாக வெளியேறியது சென்னை.! தோல்விக்கு முக்கிய காரணம் இது தான் தோனி சொன்ன பதில்.!

சென்னை : நேற்றைய ஐபிஎல் போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த…

3 hours ago