தென்னிந்திய நடிகராக கலக்கி வரும் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள 4 படங்களை இரண்டு மாதங்களில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபல தென்னிந்திய நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி . தற்போது பாலிவுட்டிலும் களமிறங்கி கலக்கவுள்ளார் . தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் ஹீரோ வேடங்களில் மட்டுமின்றி வில்லன் வேடத்திலும் தனது அசத்தலான நடிப்பில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார் .அந்த வகையில் விஜய்க்கு வில்லனாக சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.
தற்போது இவரது நடிப்பில் லாபம் , துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளிர்,மும்பைகர், மாமனிதன் உள்ளிட்ட பல படங்கள் உருவாகியுள்ளது .அது மட்டுமின்றி பாலிவுட்டில் மெர்ரி கிறிஸ்துமஸ்,காத்து வாக்குல ரெண்டு காதல் உட்பட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.அவ்வாறு இவர் நடிப்பில் உருவாகியுள்ள 4 படங்கள் மட்டுமே ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ரிலீஸாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில் தமிழ் புத்தாண்டுக்கு துக்ளக் தர்பார், ஏப்ரல் மாத இறுதியில் பேராண்மை படத்தை இயக்கிய ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் லாபம், மே மாதத்தில் யாதும் ஊரே யாவரும் கேளிர் மற்றும் நான்கு வருடமாக கிடப்பில் கிடக்கும் மாமனிதன் போன்ற படங்களும் இரண்டு மாதங்களில் சில நாட்கள் இடைவெளியில் ரிலீஸாக உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…