“வாத்தி COMING” -ரசிகர்களின் தீபாவளி ட்ரீட்டாக மாஸ்டர் டீசர்.?

Published by
Ragi

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியிட வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு,  விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .  அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி போன இந்த படத்தின் ரிலீஸ் தேதி திரையரங்குகள் திறந்த பின்னரும் இன்னும் அறிவிக்கப்படவில்லை .  ஆனால் களத்தில் சந்திப்போம்,பிஸ்கோத், இரண்டாம் குத்து,சூரரை போற்று, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்கள் தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ளது .

அதனுடன் தனுஷின் ஜகமே தந்திரம் படத்திலிருந்து ஒரு பாடலும் , ஈஸ்வரன் படத்திலிருந்து டீசரும் ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக வெளியிடப்பட உள்ளது . இந்த நிலையில் தளபதி ரசிகர்கள் மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியிட வாய்ப்பு உள்ளதாக  ட்விட்டரில் ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர்.

ஆனால் டீசர் குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிடவில்லை . இந்த தீபாவளிக்கு தளபதி ரசிகர்கள் ஏமாற்றம் அடைவார்களா அல்லது அவர்களது விருப்பம் போன்று மாஸ்டர் டீசர் வெளிவருமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் தேதி ரிலீஸ் தேதி முடிவு செய்த பின்னரே அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது ..

Published by
Ragi

Recent Posts

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

29 minutes ago

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…

1 hour ago

ஆபரேஷன் சிந்தூர் எதற்காக எப்படி நடத்தப்பட்டது? இந்திய ராணுவம் விளக்கம்!

டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…

2 hours ago

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…

3 hours ago

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

5 hours ago

ஆபரேஷன் சிந்தூர் : 80 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! பழிதீர்த்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

5 hours ago