சிம்புவின் மாநாடு படத்தினை ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் சிம்பு தனது ஈஸ்வரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் .
சமீபத்தில் மாநாடு படத்தின் டீசர் வெளியாகி வைரலாகியது குறிப்பிடத்தக்கது. பிரமாண்ட அரசியல் படமாக உருவாகும் இந்த மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இந்த மாதம் முதல் நடைபெற இருப்பதும், தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாநாடு படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது மாநாடு படத்தில் சிம்பு இஸ்லாமிய இளைஞனான அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே.இந்த நிலையில் மாநாடு படத்தினை மூஸ்லீம்களின் ஸ்பெஷல் தினமான ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…