வரலாற்றில் இன்று(13.02.2020)… ஏழைகளின் சொத்தான ரேடியோவின் உலக வானொலி நாள் இன்று…

Published by
Kaliraj

ரேடியோ என்ற சொல்லானது ரேடியஸ் ( radius) என்ற லத்தீன் மொழியிலிருந்து  பிறந்தது. இந்த வானொலியை மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி  கண்டு பிடித்தார். ´நீண்ட தூரம் ஒலிபரப்பப்படும் வானொலியின் தந்தை  என அழைக்கப்படுகிறார்.  இவர், கம்பியில்லா  தகவல்தொடர்பு முறை  மற்றும் ´மார்க்கோனி விதி  ஆகியவற்றை உருவாக்கினர். இகந்த கண்டுபிடிப்பிற்காக 1909ஆம் ஆண்டு  இவர் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் மார்கோனியுடன் இணைந்து பெற்றார்.

Image result for RADIO

உலகில், தகவல்களை  மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு அளவிடமுடியாதது. இன்று உலக முழுவதும் லட்சக்கணக்கான வானொலி நிலையங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முந்தைய காலங்களில் பேரிடர் குறித்த தகவல்கள், போர் அறிவிப்புகள் போன்றவற்றினை ஒலிப்பரப்பு வாயிலாக விரைந்து அளித்தது வானொலி. அப்படி இன்றளவும் விரைந்து ஒரு தகவலினை அளிக்கும் சாதனம் ரேடியோ என்றால் அது மிகையாகாது.  இந்த சிறந்த சாதனமான வானொலியை சிறப்பிக்க பிப்ரவரி (13.02.2020) இந்நாளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு அதாவது யுனெசுக்கோ அமைப்பு  கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  3 ஆம் நாள் உலக வானொலி நாளாக அறிவித்தது.

உலக அளவில் வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு அளவில்  வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்களை வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த முதலாவது உலக வானொலி நாள் ஐரோப்பிய நாடான இத்தாலியில் அமைந்துள்ள பீசா பல்கலைக்கழகத்தில் 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  13ஆம் நாள்  கொண்டாடப்பட்டது. வானொலிகளின் மூலம் குறைந்த செலவில் தகவல்களை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென்பதே இதன் நோக்கமாகும். எனவே வானொலி சொந்தங்கள் அனைவருக்கும் தினச்சுவடின் சார்பாக இனிய உலக வானொலி நாள் நல்வாழ்த்துகள்…

Published by
Kaliraj

Recent Posts

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…

39 minutes ago

“இப்போவாவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா தமிழர்களின் ஒரே கேள்வி” – தங்கம் தென்னரசு!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…

1 hour ago

கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் முகங்கள் 3D முறையில் வடிவமைப்பு.!

மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…

1 hour ago

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபாரம்.!

நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…

2 hours ago

ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியலில் ‘நம்பர் 1’ இடம் பிடித்த நீரஜ் சோப்ரா.!

டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…

3 hours ago

இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை.., கூடுதல் தளர்வுகளை அறிவித்த தமிழ்நாடு அரசு.!

சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…

3 hours ago