நீயின்றி உடல் இல்லை, உயிர் இல்லை, ஏன் உலகமும் இல்லை. இன்று உலக நீர் தினம்(22.03.2022)..!

Published by
Sharmi

தண்ணீர்தான்  உலகில்  உள்ள அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை ஆதாரம்அதற்கு ஈடு இணை ஏதும் இல்லைதண்ணீருக்கு மாற்று இவ்வுலகில்  ஏதுமில்லைதண்ணீர் புவியில் கிடைக்கும் வற்றாத ஒரு செல்வமும் அல்லஅதை வீணாக்கக்கூடாதுதண்ணீரின் முக்கியத்துவம்அதன் தேவை உணர்த்தும் நோக்கில் ஐ.நாசபை டிசம்பர் 1992ஆம் ஆண்டில் ஒரு தீர்மானத்தின்மூலம் மார்ச் 22ஐ உலக தண்ணீர் தினமாக அறிவித்தது. 1993ஆம் ஆண்டு முதல் இது கொண்டாடப்படுகிறது. இன்று உலகம் முழுவதும் சர்வதேச தண்ணீர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்துக்கு இணங்க ஆண்டுதோறும் மார்ச் மாதம் 22-ம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளை கொண்டாடப்பட காரணம் என்னவென்றால், உலகில் நீர் வளத்தின் ஒட்டுமொத்தத் திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர் வள பாதுகாப்பை வலுப்படுத்தவும், உலகில்  தற்போது நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர்ப் பற்றாக்குறை பிரச்சனையை தீர்ப்பது உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ளவும் விழிப்புணர்வுக்காகவும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமாகும். அதேவேளையில் இந்நாள் குறித்து  மக்களிடையே விரிவாகப் பிரசாரம் செய்து மக்களிடையே அந்தந்த நாட்டின் நீர் வளப்பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சுற்றுச்சூழலைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயற்படத் தவறியதன் விளைவுகளை மனிதக்குலம் இப்போது தாராளமாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. இந்த தினம் கொண்டாடுகிறோம் என்பது கூட இதன் விளைவே. இது ஒருபுறத்தில் வறட்சி மறுபுறத்தில் வெள்ளக்கொடுமையும் சூறாவளியும் என்று இயற்கையின் அனர்த்தங்கள் சுழற்சியாக வந்து கொண்டேயிருக்கின்றன. மழை பொழிய அதிகப்படியான மரங்களை வளர்க்க வேண்டும். தண்ணீரின் அருமையை உணர்ந்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பாதுகாக்க வேண்டும். இன்று உலக நீர் தினம் மார்ச் 22.

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

5 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

6 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

8 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

8 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

9 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

9 hours ago