பாகுபலியாக மீண்டும் மிரட்ட காத்திருக்கும் ராஜமௌலியின் கதை ..!

இயக்குனர் எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘இரத்தம் ரணம் ரௌத்திரம் இந்த திரைப்படம் . சுமார் 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைத்துள்ளார்.மேலும் இந்த படத்தில் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்ன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகிறது. மேலும் இந்த படத்தின் லோகோ மற்றும் மோஷன் போஸ்ட்ர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ராம்சரணின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் அறிமுக வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர் , மேலும் தற்போது ராஜமௌலியின் அடுத்த படத்தை குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பிரமாண்ட இயக்குநரான ராஜமௌலியின் RRR படத்தை தொடர்ந்து அவரின் அடுத்த படம் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவுடன் இணைந்து தான் என்று கூறப்படுகிறது. இவர்களின் இந்த பிரமாண்ட கூட்டணி தற்போது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025