அந்நாட்டில் கொரோனாவுடன் சேர்ந்து மலேரியா நோயும் வேகமாக பரவி வருவதால் பட்டினியில் கிடக்கும் அவல நிலைக்கு அந்நாட்டு மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
ஆப்பிரிக்கா நாடுகளின் ஒன்றான ஜிம்பாப்வே நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாகவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இங்கு சுமார் 1.50 கோடி மக்கள் தொகை கொண்டுள்ள இந்நாட்டில் தற்போது மலேரியா நோய் வேகமாக பரவி வருகிறது. இதனால் வரும் ஆண்டில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் மலேரியா நோய் அந்நாட்டை ஒருவழியாக்கும் என்று வல்லுநர்கள் கூறி வருகின்றனர். பின்னர் சில ஆண்டுகள் இதன் தாக்கம் சற்று குறைவாகவும் காணப்படும் என கூறப்படுகிறது. கடந்த 3 மாதங்களில் இந்த மலேரியா நோய்க்கு 153 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த நோயால் 1.35 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், ஒருபக்கம் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி பெருந்தொற்றாக உருவெடுத்துள்ளது. அதில் கொரோனா வைரஸ் ஜிம்பாப்வேயையும் அச்சுறுத்த தொடங்கி இருக்கிறது. இந்த கொரோனாவால் 29 பேர் பாதிக்கப்பட்டு, 4 பேர் பலியாகியுள்ளனர். வைரஸின் பரவல் இனிமே வேகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக உலக சுகாதார அமைப்பு கொரோனா குறித்த எச்சரிக்கையை தொடர்ந்து ஜிம்பாப்வே நாட்டின் பிரதமர் எமர்சன் மாங்காக்வா தனது நாட்டில் மார்ச் மாத இறுதியில் 3 வார கால ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து இருந்தார். இதையடுத்து கடந்த 19 ஆம் தேதி முதல் மேலும் 2 வாரத்துக்கு ஊரடங்கை அவர் நீட்டித்து உள்ளார். இதன் காரணமாக ஒரு கோடி மக்கள் வேலையை இழந்து வருமானமின்றி பட்டினியில் கிடக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் நோயின் அச்சுறுத்தல் இருந்தாலும் தற்போது அந்நாட்டின் மக்கள் பட்டினியில் இருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…