உங்க ஊர் இருக்கா? தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று தஞ்சாவூர், திருவாரூர் உட்பட 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு வருகிறது. இதனால், தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
அதே நேரம் தமிழகத்தில் இன்று முதல் நவ.20ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இன்று (நவ.15) தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அதன்படி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வயலில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து பேசிய இபிஎஸ்.!
July 18, 2025