அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (பிற்பகல் 1 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

சென்னை : தெற்கு ஆந்திரா வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு-தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (பிற்பகல் 1 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திண்டுக்கல், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025